/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழ்மொழி பாடத்துக்கு 6 மணி நேர பாடவேளை பாரதியார் பல்கலை உத்தரவு
/
தமிழ்மொழி பாடத்துக்கு 6 மணி நேர பாடவேளை பாரதியார் பல்கலை உத்தரவு
தமிழ்மொழி பாடத்துக்கு 6 மணி நேர பாடவேளை பாரதியார் பல்கலை உத்தரவு
தமிழ்மொழி பாடத்துக்கு 6 மணி நேர பாடவேளை பாரதியார் பல்கலை உத்தரவு
ADDED : ஜூன் 20, 2025 11:48 PM
அனைத்து இளநிலை பட்ட வகுப்புகளுக்கும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு தமிழ்மொழி பாடத்துக்கு ஆறு மணி நேர பாடவேளையை பின்பற்ற வேண்டும் என, பாரதியார் பல்கலை உத்தரவிட்டுள்ளது.
பாரதியார் பல்கலையில், பி.பி.ஏ., -- பி.காம்., -- பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய சில துறைகளுக்கு இளநிலை முதலாமாண்டு மட்டுமே தமிழ் பாடங்கள் கற்பிக்கப்பட்டன. பிற துறைகளுக்கு முதல், இரண்டு ஆண்டுகள் தமிழ் பாடம் அதாவது, நான்கு தாள்கள் மாணவர்கள் எழுதினர்.
இதிலுள்ள முரண்பாடுகளை களைய, 2021ல் இளநிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தமிழ் பாடம் கட்டாயம் படிக்கவேண்டும் என அரசு அறிவித்தது. பாரதியார் பல்கலையில் இந்த அறிவிப்பு, 2023 - 24ம் ஆண்டு முதல் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
பாரதியார் பல்கலையில், 2022 - 23ம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்தும் போது, பி.காம்., - பி.பி.ஏ., - பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய படிப்புகளுக்கு தமிழ் பாடவேளை, 4 மணி நேரமாக குறைக்கப்பட்டது. பிற பாடங்களுக்கு, 6 மணி நேரமாக பாடவேளை ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், அனைத்து துறைகளுக்கும் தமிழ் பாடவேளை, 4 மணி நேரமாக குறைக்கப்பட்டு இருப்பதாக தமிழ் ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து பல்கலை நிர்வாகம் இதை சரிசெய்யும் விதமாக பல்கலையின் கட்டுப்பாட்டில் செயல்படும் அனைத்து கல்லுாரிகளுக்கும் உத்தரவு வழங்கியுள்ளது.
உத்தரவில், அனைத்து இளநிலை பட்ட வகுப்புகளுக்கும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு தமிழ்மொழி பாடத்துக்கு ஆறு மணி நேர பாடவேலை என்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்கலை பதிவாளர்(பொறுப்பு) ரூபா இதற்கான உத்தரவை வழங்கியுள்ளார்.
- நமது நிருபர் -