/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரதியார் பல்கலை வீரர், வீராங்கனைகள் கேலோ இந்தியா விளையாட்டுக்கு தகுதி
/
பாரதியார் பல்கலை வீரர், வீராங்கனைகள் கேலோ இந்தியா விளையாட்டுக்கு தகுதி
பாரதியார் பல்கலை வீரர், வீராங்கனைகள் கேலோ இந்தியா விளையாட்டுக்கு தகுதி
பாரதியார் பல்கலை வீரர், வீராங்கனைகள் கேலோ இந்தியா விளையாட்டுக்கு தகுதி
ADDED : ஜன 20, 2025 11:27 PM

கோவை; தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தனிநபர் சண்டை, அணி கட்டா பிரிவுகளில் பாரதியார் பல்கலை வீரர், வீராங்கனைகள் வென்று, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
ஹரியானா மாநிலத்தில், அனைந்து இந்திய பல்கலைகளுக்கு இடையேயான கராத்தே போட்டி கடந்த, 15 முதல், 18ம் தேதி வரை ஆண்களுக்கு நடந்தது.
கடந்த, 19 முதல், 21ம் தேதி வரை பெண்களுக்கும் நடக்கிறது. இதில், 100க்கும் மேற்பட்ட பல்கலை வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
தனிநபர் கட்டா, தனிநபர் சண்டை, அணி கட்டா மற்றும் அணி சண்டை உள்ளிட்ட பிரிவுகளில் வீரர், வீராங்கனைகள் அசத்தி வருகின்றனர்.
இப்போட்டியில், தென் மேற்கு மண்டல பல்கலைக்கு இடையேயான கராத்தே போட்டியில், அணி சண்டைப் பிரிவில்  வென்று, தமிழகத்திலிருந்து தேர்வாகியுள்ள ஒரே அணி என்ற பெருமையுடன், பாரதியார் பல்கலை அணி களம் இறங்கியது.
ஆண்களுக்கான தனிநபர் சண்டை பிரிவில், வீரர் பரத் ஐந்தாம் இடம் பிடித்து கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
பெண்களுக்கான அணி கட்டா போட்டியில், மானசா தேவி, தன்யா ஸ்ரீ, எப்சிதா போஸ், கீர்த்தி ஜான்சி ஆகியோர் அணி அடங்கிய பாரதியார் பல்கலை அணி, ஐந்தாம் இடம் பிடித்து பெருமை சேர்த்துள்ளது.
இதன் வாயிலாக, இவர்கள் கேலோ இந்தியா விளையாட்டுக்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற அணியினரை, பல்கலை உடற்கல்வி துறை இயக்குனர் ராஜேஸ்வரன், பயிற்சியாளர் சிவசண்முகம், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.

