/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரதியார் பல்கலை வாலிபால் போட்டி: 'லீக்' சுற்றுக்கு நான்கு அணிகள் தகுதி
/
பாரதியார் பல்கலை வாலிபால் போட்டி: 'லீக்' சுற்றுக்கு நான்கு அணிகள் தகுதி
பாரதியார் பல்கலை வாலிபால் போட்டி: 'லீக்' சுற்றுக்கு நான்கு அணிகள் தகுதி
பாரதியார் பல்கலை வாலிபால் போட்டி: 'லீக்' சுற்றுக்கு நான்கு அணிகள் தகுதி
ADDED : செப் 25, 2024 09:02 PM

கோவை : பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான வாலிபால் போட்டியில், 'லீக்' சுற்றுக்கு நான்கு அணிகள் தகுதி பெற்றன.
பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரி மாணவியருக்கான வாலிபால் போட்டி, சூலுார் ஆர்.வி.எஸ்., கலை அறிவியல் கல்லூரியில், நேற்று முன்தினம் துவங்கியது; இன்று நிறைவடைகிறது.
போட்டிகளை கல்லுாரி முதல்வர் சிவக் குமார், பாரதியார் பல்கலை உடற்கல்வித்துறை தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இதில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு கல்லுாரிகளில் இருந்து, 61 அணிகள் இடம்பெற்றன. முதல் நாளில் 'நாக் அவுட்' முறையில் போட்டிகள் நடந்தன. கோவை அரசு கலைக் கல்லுாரி அணி, 2-1 என்ற செட் கணக்கில், கோவை கலைமகள் கல்லுாரி அணியை வென்றது.
பாரதியார் பல்கலை அணி, 2-0 என்ற செட் கணக்கில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லுாரி அணியை வென்றது. கே.ஜி., கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி அணியை வென்றது. தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
நேற்று முதல் 'லீக்' முறையில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, நிர்மலா மகளிர் கல்லுாரி, கோவை பாரதியார் பல்கலை அணி, கோபிசெட்டிபாளையம் பி.கே.ஆர்., கல்லுாரி அணி, கே.ஜி., கலை அறிவியல் கல்லுாரி ஆகிய நான்கு அணிகளும் 'லீக்' சுற்றில் விளையாடி வருகின்றன.
இன்று அரையிறுதி போட்டிகள் நடக்கின்றன. ஆர்.வி.எஸ்., கல்லுாரி உடற்கல்வி இயக்குனர்கள் சத்யா, கார்வேந்தன் உள்ளிட்டோர் போட்டிகளை நடத்திவருகின்றனர்.