ADDED : மார் 14, 2026 06:44 AM

அ நிறம் | அளவு
கோவை: பாரதியார் பல்கலை மகளிர் நல மையத்தின் சார்பில், உலக மகளிர் தின விழா நடந்தது.
சிறப்பு விருந்தினராக ஜெம் மருத்துவமனை தலைவர் பழநிவேலு பங்கேற்றார். ''குடும்பத்தை தாண்டி பல்வேறு துறைகளில் பெண்கள் கோலோச்சுவது வரவேற்கத்தக்கது. மற்றவர்கள் மீது காட்டும் அக்கறையை, தங்கள் உடல்நலன் மீது காட்டுவது அவசியம். சுய ஆரோக்கியத்தில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார்.
பதிவாளர் ராஜவேல், மகளிர் நல மைய தலைவர் சங்கமித்ரா, மகளிரியல் துறை தலைவர் ஜெனிட்டா ரோசலின் பங்கேற்றனர். கோமகன் அகாடமி இயக்குனர் நான்சிக்கு பாரதியின் புரட்சி பெண் விருது வழங்கப்பட்டது. ஜெம் பழநிவேலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
