/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரதியார் தின விளையாட்டு; அரசு பள்ளி மாணவியர் வெற்றி
/
பாரதியார் தின விளையாட்டு; அரசு பள்ளி மாணவியர் வெற்றி
பாரதியார் தின விளையாட்டு; அரசு பள்ளி மாணவியர் வெற்றி
பாரதியார் தின விளையாட்டு; அரசு பள்ளி மாணவியர் வெற்றி
ADDED : ஆக 05, 2025 11:49 PM

பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள பி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாரதியார் தினம், குடியரசு தின விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள் துவங்கின.
பள்ளியின் தாளாளர் முத்துலட்சுமி துவக்கி வைத்தார். முதல் நாள் போட்டியில் 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கு கூடைப்பந்து, பால் பேட்மிட்டன், கபடி, கோகோ ஆகிய போட்டிகள் நடந்தன.
பால் பேட்மிட்டன் போட்டியில், 14 மற்றும், 17 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவியர், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.
நேற்று மாணவர்களுக்கான கூடைப்பந்து, பால் பேட்மிட்டன், கபடி, கோகோ போட்டிகள் நடந்தன. இன்று அதே பள்ளி வளாகத்தில், மாணவர்களுக்கான கேரம், மேசை பந்து உள்ளிட்ட போட்டிகள் நடக்கின்றன.
இம்மாதம், 9ம் தேதி பெரியநாயக்கன்பாளையம் ஜி.கே.டி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான, 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட ஹாக்கி போட்டிகள் நடக்கின்றன.
வரும் 23ம் தேதி வரை ஜி.கே.டி., பள்ளி வளாகத்தில், மாணவர்கள் மற்றும் மாணவியர் பங்கேற்கும் ஹேண்ட்பால், கால்பந்து, எறிபந்து, வாலிபால், சிலம்பம், பீச் வாலிபால் உள்ளிட்ட போட்டிகள் நடத்த, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.