/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேற்கு குறுமைய போட்டியில் வீரர், வீராங்கனைகள் அபாரம்
/
மேற்கு குறுமைய போட்டியில் வீரர், வீராங்கனைகள் அபாரம்
மேற்கு குறுமைய போட்டியில் வீரர், வீராங்கனைகள் அபாரம்
மேற்கு குறுமைய போட்டியில் வீரர், வீராங்கனைகள் அபாரம்
ADDED : ஆக 05, 2025 11:49 PM
கோவை; பள்ளி கல்வித்துறை சார்பில் பாரதியார் தின, குடியரசு தின விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள் நடந்துவருகின்றன. கோவை நேரு ஸ்டேடியத்தில் மேற்கு குறுமைய போட்டிகள் நடக்கின்றன.
இதில், 17 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் லுார்து மலர், தன்சிகா, ஸ்ரீஹரினி ஆகியோர் முதல் மூன்று இடங்களையும், வட்டு எறிதல் போட்டியில் அஜன்யா, தனுஸ்ரீ, ஜோசிகா ஆகியோரும், ஈட்டி எறிதலில் ஆசிக், அஜன்யா, தாரணி ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
மாணவர்களுக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில், ஜான் ஆல்பின், சிவரஞ்சன், அஸ்வின் ஆகியோரும், குண்டு எறிதலில் ஆகாஷ், சச்சின் கிருஷ்ணா, அபினேஷ் ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான, 400 மீ., ஓட்டத்தில் சஞ்சய், அஜய், வருண் ஆகியோரும், 1,500 மீ., ஓட்டத்தில் ரஞ்சித், சஞ்சீவ், இன்னோதயா ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
நீளம் தாண்டுதலில் கடம்பீஸ்வரன், இர்பான், ஸ்ரீநிகேஷ் ஆகியோரும், ஈட்டி எறிதலில் மிதுன், நந்தகுமார், கவியரசு ஆகியோரும், 14 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான 400 மீ., ஓட்டத்தில் லாவண்யா, அஸ்விகா, சர்ஜனாஸ்ரீ ஆகியோர் முதல் மூன்று இடங்களை வென்றனர்.
உயரம் தாண்டுதலில் சஞ்சனா, தமிழினி, தீதனாஸ்ரீ ஆகியோரும், நீளம் தாண்டுதலில் நிதர்சனா, தக்சிதா, லாவண்யா ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். தொடர்ந்து, பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன.