பாரதியார் பிறந்த நாள் விழா பள்ளியில் கொண்டாட்டம்
பாரதியார் பிறந்த நாள் விழா பள்ளியில் கொண்டாட்டம்
ADDED : டிச 13, 2025 07:50 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பாரதியாரின், 143வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் தினகரன் தலைமை வகித்தார்.
பாரதியாரின் தேசப்பற்று, பெண்கள் விடுதலை, கல்வியின் முக்கியத்துவம் போன்றவை விளக்கும் வகையில் கட்டுரை, கவிதை வாசிப்பு, பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
மாணவர்கள், பாரதியார் போன்று, வேட்டி, சட்டை, தலைப்பாகை அணிந்து அணிவகுத்தனர்.
பள்ளி தலைமையாசிரியர் கூறுகையில், 'இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்ட தியாக வீரர்களின் பிறந்த நாட்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை பள்ளியில் நடத்தும் போதும், இளம் மனங்களின் தேசப்பற்று விதைக்கப்படும்.
பாரதியாரின் தியாகங்கள், போராட்டங்கள், மக்கள் சேவை, தொண்டுகள், மொழியாற்றல், இலக்கணப்புலமை, கவிதை திறன் ஆகியவை குறித்து மாணவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்,'' என்றார்.
பள்ளி ஆசிரியர் சத்தியா, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
