/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை வசதிக்கு பாரதியார் வீதி காத்திருப்பு; கோரிக்கைகளுக்கு தீர்வு காண உத்தரவு

ADDED : பிப் 21, 2024 12:09 AM

கோவை:மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்த கமிஷனர், உரிய நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
வடக்கு மண்டலம், 28வது வார்டுக்கு உட்பட்ட கிருஷ்ணராயபுரம், ஆவாரம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு செய்தார். அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர், கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
சரவணம்பட்டி அருகே மாநகராட்சி, 21வது வார்டில் உள்ள பாரதியார் வீதி, சிவதங்கம் நகர், அபிராமி நகர் உட்பட, 10க்கும் மேற்பட்ட வீதிகளில், 24 மணி நேர குடிநீர் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு தோண்டப்பட்ட ரோடு குண்டும், குழியுமாக உள்ளது.
குறிப்பாக, பாரதியார் வீதியில் கடந்த, 15 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் உள்ள ரோட்டை, சீரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று, நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது, முதற்கட்டமாக சாலைகளில் 'பேட்ச் ஒர்க்' செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், பின் தார் ரோடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது, அப்பகுதி மக்களுக்கு நிம்மதியை தந்துள்ளது.
உதவி கமிஷனர் ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.