/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பவானி ஆற்று நீர் பாசன விவசாயிகள் கூட்டம்
/
பவானி ஆற்று நீர் பாசன விவசாயிகள் கூட்டம்
ADDED : அக் 17, 2024 11:33 PM
மேட்டுப்பாளையம் : பவானி ஆற்று நீர் பாசன விவசாயிகள் சங்க பேரவை கூட்டம், இன்று சிறுமுகை அருகே நடைபெற உள்ளது.
பவானி ஆற்றின் கரையோரம் உள்ள நெல்லித்துறை, தேக்கம்பட்டி, ஓடந்துறை, சிக்கதாசம்பாளையம், ஆலாங்கொம்பு, சிறுமுகை மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பவானி ஆற்றுத் தண்ணீரை எடுத்து, விவசாயம் செய்து வருகின்றனர். இந்த விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து, பவானி ஆற்று நீர் பாசன விவசாயிகள் சங்கத்தை உருவாக்கியுள்ளனர். சங்கத்தின் பேரவை கூட்டம் இன்று காலை, 10:30 மணிக்கு ஆலங்கொம்பு சக்தி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் விவசாயிகள் மாநாட்டில் எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், அத்திக்கடவு-அவிநாசி இரண்டாவது திட்டத்தை நிறைவேற்ற கோரியும், பவானி ஆற்றிலிருந்து நீரேற்று பாசனம் செய்யும், விவசாயிகளுக்கு நீர் பாசன அனுமதி வழங்க, தமிழக அரசை வலியுறுத்துவது உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.
எனவே இந்த பேரவை கூட்டத்திற்கு அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ள வேண்டும் என, தலைவர் துரைசாமி, துணைத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் அறிக்கையில் கூறியுள்ளனர்.