/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிழற்கூரை அமைக்க ஏழூரில் பூமி பூஜை
/
நிழற்கூரை அமைக்க ஏழூரில் பூமி பூஜை
ADDED : அக் 07, 2025 12:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, ஏழூரில் புதிதாக நிழற்கூரை கட்ட பூமி பூஜை நடந்தது.
கிணத்துக்கடவு, ஏழூரில் 400க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேலும், இங்கு தனியார் கல்லூரி, நிறுவனங்கள் அமைந்துள்ளது. இப்பகுதி மக்கள் நலன் கருதி, இங்கு நிழற்கூரை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், நிழற்கூரை அமைக்கும் பணியை எம்.எல்.ஏ., தாமோதரன் துவக்கி வைத்தார். கிணத்துக்கடவு முன்னாள் எம்.எல்.ஏ., சண்முகம், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.