/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளி புதுப்பிக்க பூமி பூஜை
/
அரசு பள்ளி புதுப்பிக்க பூமி பூஜை
ADDED : டிச 04, 2024 10:21 PM
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள உருமாண்டம் பாளையம் அரசு பள்ளியை, 80 லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்க பூமி பூஜை நடந்தது.
துடியலூர் அருகே உருமாண்டம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி நூற்றாண்டு பழமை வாய்ந்தது. கடந்த, 1924ம் ஆண்டு துவக்கப்பட்ட இப்பள்ளியின் நூற்றாண்டு விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது.
தற்போது பழுதான நிலையில் உள்ள இப்பள்ளியை புணரமைக்க முன்னாள் மாணவர்கள் நடவடிக்கை எடுத்தனர். முன்னாள் மாணவர்களுக்கு உதவியாக, 80 லட்ச ரூபாய் செலவில் மார்ட்டின் குரூப், தனியார் கம்பெனிகள், பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் பங்களிப்புடன் மாநகராட்சி இணைந்து இப்பள்ளியை புனரமைக்கவும், புதிய கட்டடம் கட்டவும், தரைத்தளம் புனரமைக்கவும் பள்ளி வளாகத்தில் பூமி பூஜை நடந்தது.
நிகழ்ச்சியில், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார், மார்ட்டின் குரூப் இயக்குனர் லீமா ரோஸ் மார்ட்டின், மாநகராட்சி கவுன்சிலர்கள் சித்ரா, சாந்தாமணி, புஷ்பமணி உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.