/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நேரு ஸ்டேடியம் கேலரி புதுப்பிக்க பூமி பூஜை
/
நேரு ஸ்டேடியம் கேலரி புதுப்பிக்க பூமி பூஜை
ADDED : ஆக 23, 2025 02:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை நேரு ஸ்டேடியம், 30 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வகையில், 50 ஆண்டுகளுக்கு முன் பல்வேறு அம்சங்களுடன் கட்டப்பட்டது. கேலரி சிதிலமடைந்து உள்ளது. மழைக்காலத்தில் தண்ணீர் ஒழுகுவதால் சீரமைக்க, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் நிதி கோரப்பட்டது. 4 கோடியே, 89 லட்சத்து, 48 ஆயிரம் ரூபாய் ஒதுக்கியதால், அப்பணியை துவக்குவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரியிடம் கேட்டபோது,''கேலரி புதுப்பிக்கும் பணி இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது. கேலரியில் உள்ள ஷீட்டுகள் மாற்றுதல், 'வாட்டர் புரூப்பிங்' செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன,'' என்றார்.