ADDED : செப் 30, 2024 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கருமத்தம்பட்டி : செம்மாண்டாம்பாளையம் ஊராட்சியில் கான்கிரீட் ரோடு போட, சூலூர் எம்.எல்.ஏ., கந்தசாமி தனது தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து, 17 லட்சத்து, 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்தார். இதேபோல், சிறுபாலம் கட்டவும், மாவட்ட ஊராட்சி சேர்மன் சாந்திமதி, தனது வளர்ச்சி நிதியில் இருந்து, 38 லட்சத்து, 48 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.
இப்பணிகளுக்கான பூமி பூஜையை. எம்.எல்.ஏ., கந்தசாமி துவக்கி வைத்தார். எம்.ஜி.ஆர்., மன்ற நிர்வாகி அசோகன், ஒன்றிய செயலாளர் குமரவேல், ஊராட்சி தலைவர் ஜானகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.