/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோடு மற்றும் கால்வாய் பணிக்கு பூமிபூஜை
/
ரோடு மற்றும் கால்வாய் பணிக்கு பூமிபூஜை
ADDED : பிப் 23, 2024 10:49 PM
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, பாலர்பதியில் ரோடு மற்றும் கால்வாய் அமைக்க நேற்று பூமி பூஜை நடந்தது.
கிணத்துக்கடவு, சொக்கனுார் ஊராட்சி, பாலார்பதி கிராமத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு, 7வது வார்டில் சில ஆண்டுகளாக ரோடு மற்றும் கால்வாய் வசதி இல்லாமல் உள்ளது. அப்பகுதி மக்கள் நலன் கருதி கான்கிரீட் ரோடு மற்றும் கால்வாய் அமைக்க நேற்று பூமி பூஜை நடந்தது.
இதில், 232 மீட்டர் கால்வாயும், 43 நீளத்துக்கு மீட்டர் கான்கிரீட் ரோடும் அமைக்க, 15வது நிதி குழுவில் இருந்து, 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பூமி பூஜை நிகழ்ச்சியில், சொக்கனுார் ஊராட்சி தலைவர் திருநாவுக்கரசு மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.