ADDED : மார் 11, 2024 09:33 PM
குடிமங்கலம்:பண்ணைக்கிணறு ஊராட்சி ஜல்லிபட்டியில், தரைமட்ட நீர் தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை நடந்தது.
குடிமங்கலம் ஒன்றியம், பண்ணைக்கிணறு ஊராட்சிக்குட்பட்ட ஜல்லிபட்டி கிராமத்துக்கு, திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
வினியோக பாதிப்புகளை தவிர்க்க, கிராமத்துக்கு தரை மட்ட நீர் தேக்க தொட்டி அமைக்க மக்கள் வலியுறுத்தி வந்தனர். அதன்படி, மடத்துக்குளம் எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியில், 8.60 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
பணிகளை துவக்க கிராமத்தில் நடந்த பூமி பூஜையில், மடத்துக்குளம் எம்.எல்.ஏ., மகேந்திரன் தலைமை வகித்தார். பண்ணைக்கிணறு ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.
இதே போல், உடுமலை ஒன்றியம், விளாமரத்துப்பட்டி கிராமத்தில், 12.30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய ரேஷன் கடை கட்டவும், ரெட்டிபாளையம் கிராமத்தில், 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், வெள்ளத்தடுப்பு சுவர் கட்டவும், பூமி பூஜை போடப்பட்டு பணிகள் துவங்கியுள்ளது.
