/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதையில்லா கோவையை வலியுறுத்தி சைக்கிள் பேரணி
/
போதையில்லா கோவையை வலியுறுத்தி சைக்கிள் பேரணி
ADDED : செப் 08, 2025 06:25 AM
கோவை; கோவை மாவட்ட சைக்கிளிங் அசோசியேஷன் சார்பில், போதையில்லா கோவையை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.
கோவை ரேஸ்கோர்ஸ் சக்தி சுகர்ஸ் முன் துவங்கிய பெரியவர்களுக்கான, 50 கி.மீ., சைக்கிள் பேரணி சுங்கம் ரவுண்டானா, உக்கடம், செல்வபுரம் பைபாஸ், சிறுவாணி ரோடு, ஆலாந்துறையில் நிறைவடைந்தது.
குழந்தைகளுக்கான, 15 கி.மீ., விழிப்புணர்வு பேரணி சுங்கம் ரவுண்டானா, வாலாங்குளம் வழியாக ரேஸ்கோர்ஸில் நிறைவடைந்தது. இதில், போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகள் ஏந்திச் செல்லப்பட்டன.
பேரணியை சக்தி சுகர்ஸ் தலைவர் மாணிக்கம், மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
கோவை மாவட்ட சைக்கிளிங் அசோசியேஷன் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநில செயல் உறுப்பினர் சபரீசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.