/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சைக்கிள் இன்னும் 90 நாட்களில் வருகிறது
/
11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சைக்கிள் இன்னும் 90 நாட்களில் வருகிறது
11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சைக்கிள் இன்னும் 90 நாட்களில் வருகிறது
11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சைக்கிள் இன்னும் 90 நாட்களில் வருகிறது
PUBLISHED ON : நவ 10, 2025 12:00 AM
--- நமது நிருபர் -: 2025-26ம் கல்வியாண்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 11ம் வகுப்பு பயிலும் மாணவ - மாணவிகளுக்கு, இலவச சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.
இதற்காக இரண்டு நிறுவனங்களுக்கு, கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, கோவை மாவட்டத்தில் மட்டும், 17,782 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன. மாணவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு, சைக்கிள் வினியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில், மாணவிகளுக்கு ரூ.4,250 மதிப்பிலும், மாணவர்களுக்கு ரூ.4,375 மதிப்பிலும் (ஜி.எஸ்.டி.யுடன்) சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன.
சைக்கிள்களின் பாகங்கள் பொருத்துவதற்கு ஏதுவாக, பள்ளிகளில் போதிய இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தாமதமாக வினியோகிக்கப்படும் சைக்கிள்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து அதிகபட்சமாக, 10 சதவீதம் வரை அபராதம் வசூலிக்கவும்; சைக்கிள் வழங்கப்பட்ட 15 நாட்களுக்குள், அதில் ஏதேனும் செயல்பாட்டு குறைபாடு ஏற்பட்டால், அதை அந்த நிறுவனங்களே சரி செய்து தர வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாணவர்களுக்கான சைக்கிள்கள் வழங்குவதற்கான பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளன. இந்த பணிகள், 90 நாட்களுக்குள் நிறைவடையும். பணிகள் முடிந்தவுடன், மாணவர்களுக்கு வினியோகிக்கப்படும்.
'அத்துடன், ஒவ்வொரு பள்ளிக்கும் மாணவர்களின் அவசரப் பயன்பாட்டிற்காக தலா இரண்டு ஏர் பம்புகள், சைக்கிள் லிவர் மற்றும் ஒரு டூல் கிட் ஆகியவை வழங்கப்படும்,' என்றார்.

