ADDED : மார் 31, 2026 06:28 PM
அ நிறம் | அளவு
கோவை: ராமநாதபுரம் போலீசார், நஞ்சுண்டாபுரம் ஈஷா மின்மயானம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் நின்ற வாலிபரை பிடித்து சோதனையிட்டபோது, கஞ்சா பொட்டலம் வைத்திருந்தது தெரிய வந்தது.
விசாரணையில், அவர் பீகார் மாநிலம், சூபவுல் பகுதியை சேர்ந்த அனில்குமாரை, 29, எனத் தெரிந்தது. மேட்டுப்பாளையத்தில் தங்கி கூலி வேலைக்கு வேலைக்கு செல்வது போல அறை எடுத்து தங் கஞ்சா கடத்தி விற்றது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் அவருடன் தொடர்புடைய கஞ்சா விற்கும் கும்பல் குறித்து விசாரிக்கின்றனர்.
