/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மரத்தில் பைக் மோதல் : இரு மாணவர்கள் பலி
/
மரத்தில் பைக் மோதல் : இரு மாணவர்கள் பலி
ADDED : நவ 06, 2025 11:35 PM
போத்தனூர்: கோவை, குனியமுத்தூர் அடுத்து சுகுணாபுரத்திலுள்ள தனியார் இன்ஜி., தொழில்நுட்ப கல்லூரி, மூன்றாமாண்டு மாணவர் தென்காசி மாவட்டம், செங்கோட்டையை சேர்ந்த சைலேஷ் விஸ்வநாதன், 20. பி.கே.புதூரில் தங்கி படித்து வந்தார். உடன் பயின்றவர் குறிச்சி ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சூர்ய நாராயணன் , 20.
நேற்று மதியம் இருவரும் பைக்கில் கோவை-பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் மரப்பாலம் நோக்கி சென்றனர். சைலேஷ் விஸ்வநாதன் பைக்கினை ஓட்டினார். மதுக்கரை மிலிட்டரி கேம்ப் அருகே செல்லும்போது எதிர்பாராதவிதமாக பைக் சாலையோரத்திலுள்ள மரத்தில் மோதியது.
தலையில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மதுக்கரை போலீசார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்தால் அவ்வழியே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

