/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீலிக்கோணாம்பாளையம் பாலத்துக்கு மேலும் ரூ.11 கோடி கேட்டு முன்மொழிவு
/
நீலிக்கோணாம்பாளையம் பாலத்துக்கு மேலும் ரூ.11 கோடி கேட்டு முன்மொழிவு
நீலிக்கோணாம்பாளையம் பாலத்துக்கு மேலும் ரூ.11 கோடி கேட்டு முன்மொழிவு
நீலிக்கோணாம்பாளையம் பாலத்துக்கு மேலும் ரூ.11 கோடி கேட்டு முன்மொழிவு
ADDED : நவ 06, 2025 11:35 PM
கோவை: நீலிக்கோணாம்பாளையம் ரயில்வே மேம்பாலத்துக்குத் தேவையான நிலம் கையகப்படுத்த, மேலும் 11 கோடி ரூபாய் கேட்டு, தமிழக அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.
கோவையில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க தண்ணீர்பந்தல் - விளாங்குறிச்சி ரோடு, எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி மற்றும் நீலிக்கோணாம்பாளையத்தில் ரயில்வே மேம்பாலங்கள் கட்ட வேண்டியிருந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி மேம்பாலத்துக்கு தேவையான நிலம் கையகப்படுத்த, நில உரிமையாளர்களுடன் பேச்சு நடத்தி, இழப்பீடு வழங்கப்பட்டது. தற்போது பாலம் பணி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வர தயார் செய்யப்பட்டிருக்கிறது. அடுத்த கட்டமாக தண்ணீர் பந்தல் பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது.
நீலிக்கோணாம்பாளையத்தில், 26 கண்களுடன், 670 மீட்டர் நீளத்துக்கு, 8.5 மீட்டர் அகலத்துக்கு இரு வழிச்சாலையாக, மேம்பாலம் அமைக்கப்படுகிறது. மாநில நெடுஞ்சாலைத்துறை கிராம சாலைகள் பிரிவினர் இப்பணியை மேற்கொள்கின்றனர். முதலில், 330 மீட்டர் நீளத்துக்கும், இரண்டாம் கட்டமாக, 1,300 மீட்டர் நீளத்துக்கும் அணுகுசாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
மாநில நெடுஞ்சாலைத்துறை நில எடுப்பு பிரிவினர், நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம், 20,194 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்த, 41.48 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதுவரை, 31.97 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கி, 13,947 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.
இன்னும் 6,247 சதுர மீட்டர் கையகப்படுத்த வேண்டும். 9.51 கோடி ரூபாய் மட்டுமே கையிருப்பில் இருக்கிறது. தேவையான நிலம் கையகப்படுத்த கூடுதலாக 11 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. கூடுதல் நிதி கேட்டு, நெடுஞ்சாலைத்துறையில் இருந்து தமிழக அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டிருக்கிறது.

