/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தாலி செயின் பறிக்க முயன்றவர் கைது
/
தாலி செயின் பறிக்க முயன்றவர் கைது
ADDED : நவ 06, 2025 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
பீளமேடு, ஆவாரம்பாளையம், சீனிவாசா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ்.
இவரது மனைவி தீபா,48, நேற்று முன்தினம், அங்குள்ள ரோட்டில் நடந்து சென்ற போது, பின்னால் வந்த ஆசாமி, அவர் அணிந்திருந்த தாலி செயினை பறிக்க முயன்றார். தீபா கூச்சலிட்டதும் அங்கிருந்து தப்பி ஓடிய ஆசாமியை, பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரிக்கையில், நகை பறிக்க முயன்றவர், கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், பெருவல்லுாரை சேர்ந்த முகமது அமீன்,23,என்பது தெரிய வந்தது. பீளமேடு போலீசார் அவரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

