/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தினமலர் பட்டம் வினாடி-வினா போட்டி: மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர் அசத்தல்
/
தினமலர் பட்டம் வினாடி-வினா போட்டி: மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர் அசத்தல்
தினமலர் பட்டம் வினாடி-வினா போட்டி: மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர் அசத்தல்
தினமலர் பட்டம் வினாடி-வினா போட்டி: மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர் அசத்தல்
ADDED : நவ 06, 2025 11:35 PM

கோவை: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்', இந்துஸ்தான் கல்விக்குழுமம் மற்றும் கோவை மாநகராட்சி சார்பில், பள்ளி மாணவ, மாணவியரின் பொது அறிவுத் திறன், பாடப்பகுதி அறிவு ஆகியவற்றை மேம்படுத்தவும், பாடங்கள் மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கவும் வினாடி -வினா போட்டி நடத்தப்படுகிறது.
வரதராஜபுரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடந்த போட்டியில், முதற்சுற்று எழுத்து தேர்வில், 70 பேர் பங்கேற்றனர். 'எப்' அணியை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவர் ஸ்ரீவர்ஷன், ஒன்பதாம் வகுப்பு மாணவர் சுஜய்ராம் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
இவர்களுடன், 'டி' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவியர் சவுமியா, யோகஸ்ரீ, 'சி' அணியின் ஒன்பதாம் வகுப்பு மாணவியர் இனியா, சிவசங்கரி, 'எப்' அணியின் ஏழாம் வகுப்பு மாணவியர் ஷாலினி, ஜாஸ்பர் அபிகா நேசலின், 'ஜி' அணியின் எட்டாம் வகுப்பு மாணவர்கள் அகில பிரியன், ஸ்ரீவிஷாக் ஆகியோர், அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.
பள்ளி தலைமை ஆசிரியை ரஞ்சிதம் பரிசு வழங்கினார்.
ஆசிரியர்கள் லோகேஸ்வரி, நஜீமா ஆயிஷா, வளர்மதி, லதா, உஷா பானு, ஜெனிபர், சுமதி ஆகியோர் பங்கேற்றனர். மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், முதற்சுற்று எழுத்து தேர்வில் 120 பேர் பங்கேற்றனர்.
இரண்டாவது சுற்றுக்கு, எட்டு அணிகளில் இருந்து 16 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 'டி' அணியை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவர்கள் ஸ்வர்திக், பிரபாகரன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இவர்களுடன், 'சி' அணியை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவர்கள் ஹரிஷ்வரண், மிதுன், 'எப்' அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவியர் சஞ்சனா, ஹரிணி, 'எச்' அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவர் ஹேமந்த், ஆறாம் வகுப்பு மாணவி பிரியதர்ஷினி, 'பி' அணியின் ஆறாம் வகுப்பு மாணவர்கள் சைதேஸ்வர், மோகன் ஆகியோர் அடங்கிய அணி, அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இவர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியை (பொ) சுகுணா பரிசு வழங்கினார். ஆசிரியர்கள் சூர்யபிரபா, ஜெயந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

