/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விபத்துக்குள்ளான வாகனத்தில் பைக்குகள் மோதல்; 8 பேர் காயம்
/
விபத்துக்குள்ளான வாகனத்தில் பைக்குகள் மோதல்; 8 பேர் காயம்
விபத்துக்குள்ளான வாகனத்தில் பைக்குகள் மோதல்; 8 பேர் காயம்
விபத்துக்குள்ளான வாகனத்தில் பைக்குகள் மோதல்; 8 பேர் காயம்
ADDED : மார் 31, 2025 10:00 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே நடந்த விபத்தில், அடுத்தடுத்து நான்கு பைக்குகள் சரக்கு வாகனத்தில் மோதியதில், எட்டு பேர் காயமடைந்தனர்.
பாலக்காடு - பொள்ளாச்சி ரோடு, பொன்னாயூர் அருகே கனரக வாகனம், சரக்கு வாகனத்தை முந்தி சென்றது. அப்போது, வாகனத்தை இடதுபுறம் திருப்பியபோது, எதிர்பாரதவிதமாக இரு வாகனங்களும் மோதிக்கொண்டன.
அதில், ரோட்டில் வாகனத்தை நிறுத்தி, கனரக வாகன டிரைவர் திருப்பூரை சேர்ந்த காளிமுத்து,41, சரக்கு வாகன டிரைவர் பாலக்காடு சித்துாரை சேர்ந்த சந்தோஷ்,31 ஆகியோர் வாக்குவாதம் செய்தனர்.
அப்போது, கேரளா மாநிலத்தில் இருந்து வந்த நான்கு இருசக்கர வாகனங்கள், கனரக சரக்கு வாகனத்தில் மோதின. அதில், கேரளா மாநிலத்தை சேர்ந்த முகமது அஸ்லாம்,22, மன்னார்காடு அப்சல்,22, மலப்புரம் ரியாஸர்,22, சியாஸ்,17, ஆகியோரும், மற்ற பைக்குகளில் வந்த பொள்ளாச்சி நடுப்புணியை சேர்ந்த கார்த்தி,33, சல்மான்,19, ரீபன்,18, அங்குராஜ்,17 ஆகியோர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை மீட்டு, பொள்ளாச்சி அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

