ADDED : மே 28, 2026 05:41 AM
அ நிறம் | அளவு
கோவை: சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனுாருக்கு ஒரு வழி சிறப்பு ரயில்(08201) இயக்கப்படுகிறது.
பிலாஸ்பூரில் இருந்து இன்று இரவு 9:10க்கு புறப்படும் ரயில் மூன்றாம் நாள் காலை 9:45க்கு போத்தனுார் அடைகிறது. துர்க் ஸ்டேஷன், விஜயவாடா, குண்டூர், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ஸ்டேஷன்களில் இந்த ரயில் நின்று செல்லும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
