ADDED : மார் 17, 2026 04:36 AM
அ நிறம் | அளவு
கோவை: பிலாஸ்பூர்-திருநெல்வேலி இடையேயான கோவை வழி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், எர்ணாகுளம்-ஆலப்புழா ஸ்டேஷனிற்கு இடைப்பட்ட சேர்த்தலா ஸ்டேஷனில் சோதனை அடிப்படையில் நின்று செல்லும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, பிலாஸ்பூர்-திருநெல்வேலி ரயிலானது (22619) இன்று முதல் இரவு 8:24 மணிக்கும் (புதன்), திருநெல்வேலி-பிலாஸ்பூர் ரயில் (2260) வரும் 22 முதல் காலை 7:14 மணிக்கும் (ஞாயிறு) சேர்த்தலா ஸ்டேஷனில் நின்று செல்லும். பயணிகளிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இச்சேவை நிரந்தரமாக்கப்படும்என, ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
