ADDED : அக் 01, 2026 07:36 AM
அ நிறம் | அளவு
கோவை: சூலுார் அருகே 10 வயது சிறுமி, மே 21ல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் நாகப்பட்டினம் கார்த்திக்,33, தஞ்சாவூர் மோகன்,31, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது, கோவை முதன்மை போக்சோ கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது எதிரி தரப்பில், இரண்டு சாட்சிகளிடம் மீண்டும் விசாரிக்க அனுமதிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, இவர்களிடம் அரசு தரப்பில் குறுக்கு விசாரணை செய்யயப்பட்டது. அதை தொடர்ந்து இரு தரப்பு வாதத்திற்கு வழக்கு, வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
