ADDED : அக் 01, 2026 07:36 AM
அ நிறம் | அளவு
கோவை: மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. வடகிழக்கு பருவமழையில் சற்று மழை கிடைக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை விரைந்து செய்ய, மாநகராட்சி, வருவாய், நெடுஞ்சாலை, மின்சார வாரிய அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டது.
ஊழியர்கள் ஆய்வு செய்தபோது ஆர்.எஸ்.புரம், ரேஸ்கோர்ஸ், காந்திபுரம், சாய்பாபா காலனி உள்ளிட்ட பல பகுதிகளில் மரக்கிளைகள் ஆபத்தான நிலையில் தொங்குவது கண்டறியப்பட்டது. ஆர்.எஸ்.புரம் சுப்ரமணியம் வீதியில் மரக்கிளை, மின்சார ஒயர் மீது தொங்கி கீழே விழும் நிலையில் உள்ளது.
பட்டுப்போன மரம் மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள மரக்கிளைகளை வெட்ட வேண்டுமென, மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
