ADDED : ஆக 19, 2026 06:23 PM
அ நிறம் | அளவு
கோவை: மாநகராட்சி 97வது வார்டில் பில் கலெக்டராக இருந்தவர் யமுனா தேவி.
சுந்தராபுரத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவரிடம், காலியிட வரி விதிப்புக்கு ரூ.40,000 லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக பிடிபட்டார். கைது நடவடிக்கைக்கு உள்ளாகும் அரசு அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவது நடைமுறை. யமுனா தேவி இன்னும் 6 மாதங்களில் பணி ஓய்வு பெறவுள்ளார். லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டதால் கமிஷனர் ரவி தேஜா அவரை சஸ்பெண்ட் செய்துள்ளார்.
