மாவட்ட வாள் சண்டை போட்டி புள்ளிகள் குவித்த அரசுப்பள்ளி
மாவட்ட வாள் சண்டை போட்டி புள்ளிகள் குவித்த அரசுப்பள்ளி
ADDED : ஆக 19, 2026 06:30 PM
கோவை: மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியருக்கான வாள் சண்டை போட்டி, நேரு ஸ்டேடியம் எதிரே கபடி உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. இன்றும் நடக்கிறது. 340 பேர் பங்கேற்றுள்ளனர்.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் நேற்று 19 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான போட்டிகளை துவக்கி வைத்தார்.
தனிநபர் ‘எபி’ ஸ்டைல் போட்டியில் செயின்ட் மேரிஸ் பெண்கள் பள்ளி, புனித ஜோசப் பள்ளி, பயனீர் மில்ஸ், காளியண்ணன்புதுார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியன முதல் நான்கு இடங்களை வென்றன.
‘பாயில்’ ஸ்டைலில் காளியண்ணன்புதுார் அரசுப்பள்ளி, எஸ்.ஆர்.என்.வி., பள்ளி, செயின்ட் மேரிஸ், எஸ்.ஆர்.என்.வி., பள்ளி ஆகியனவும், ‘சேபர்’ ஸ்டைலில் காளியண்ணன்புதுார் அரசுப்பள்ளி, எஸ்.ஆர்.என்.வி., செயின்ட் ஜோசப் பள்ளி, கோவை மாவட்ட மாடல் பள்ளி ஆகியன முதல் நான்கு இடங்களை வென்றன. இதர பிரிவினருக்கு இன்று போட்டிகள் நடக்கின்றன.
