/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
24 மணி நேரத்தில் பில்லூர் அணையின் நீர்மட்டம் 13 அடி உயர்வு
/
24 மணி நேரத்தில் பில்லூர் அணையின் நீர்மட்டம் 13 அடி உயர்வு
24 மணி நேரத்தில் பில்லூர் அணையின் நீர்மட்டம் 13 அடி உயர்வு
24 மணி நேரத்தில் பில்லூர் அணையின் நீர்மட்டம் 13 அடி உயர்வு
ADDED : ஆக 04, 2025 08:23 PM
மேட்டுப்பாளையம்; நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால், 24 மணி நேரத்தில், 13 அடி நீர்மட்டம் உயர்ந்து, 92 அடியை எட்டியது.
கோவை மாவட்ட எல்லையில் உள்ள பில்லூர் வனப்பகுதியில், 100 அடி உயரத்தில், பில்லூர் அணை கட்டப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி, ஆகிய பகுதிகளில் உள்ள, 460 சதுர மைல்கள்,பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளாகும்.
ஜூன் மாதம் இரண்டு முறையும், ஜூலை மாதம் இரண்டு முறையும் பில்லூர் அணை நிரம்பி வழிந்தது. அணைக்கு நீர்வரத்து அதிக அளவில் இருப்பதை அடுத்து, தொடர்ச்சியாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.
கடந்த, 3ம் தேதி காலை, 8:00 மணி நிலவரப்படி அணையில், 79 அடிக்கு தண்ணீர் இருந்தது. வினாடிக்கு, 896 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சியில், 29 மி.மீட்டர் மழையும், அப்பர் பவானியில், 32 மி.மீட்டர், குந்தாவில், 12 கெத்தையில், 5 மி.மீட்டர், பில்லூர் அணையில், 6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் அணைக்கு வினாடிக்கு அதிகபட்சமான, 2054 கன அடி தண்ணீர் வந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து.
நேற்று காலை, 8:00 மணிக்கு, அணையில் நீர்மட்டம், 92 அடியை எட்டியுள்ளது. 24 மணி நேரத்தில் அணையில், 13 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
மேலும் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை, பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும் என பில்லூர் அணை அதிகாரிகள் தெரிவித்தனர்.