/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தோட்டக்கலைப்பயிர்களுக்கு உயிர் உரக்கலவை கரைசல்
/
தோட்டக்கலைப்பயிர்களுக்கு உயிர் உரக்கலவை கரைசல்
ADDED : பிப் 10, 2025 05:40 AM
ஆனைமலை: தோட்டக்கலைப்பயிர்களுக்கு உயிர் உரக்கலவை கரைசல் பயன்படுத்தலாம் என விவசாயிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் கோபிநாத் அறிக்கை வருமாறு:
தோட்டக்கலை பயிர்களுக்கு உயிர் உரக்கலவை கரைசல் பரிந்துரைக்கப்படுகிறது. உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பச்சை சாணி போன்றவை உரக்கலவை தயாரிக்க தேவைப்படுகிறது. இரண்டு கிலோ அசோஸ்பைரில்லம், இரண்டு கிலோ பாஸ்போ பாக்டீரியா, 10 கிலோ பச்சை சாணி, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து கரைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த உயிர் உரக்கலவை கரைசலானது பழச்செடிகள், காய்கறிகள் மற்றும் அலங்கார செடிகள் போன்றவற்றுக்கு, இரண்டு லிட்டர் வீதம் உபயோகப்படுத்தி, பயிர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கலாம். அசோஸ்பைரில்லத்தினை செடிகளுக்கு இடுவதால், அவற்றின் எண்ணிக்கை பெருகி தழைச்சத்தை அதிகளவில் பயிர்களுக்கு வழங்குகிறது. பாஸ்போபாக்டீரியா பயிருக்கு கரைந்து கிடைக்காத நிலையில் இருக்கும். மணிச்சத்தை அங்க அமிலங்களை உற்பத்தி செய்து கரைய வைத்து பயிர்கள் ஏற்கும் வகையில் தருகிறது.
மேலும், மண்ணின் மணிச்சத்து நிலை நிறுத்துதல் தடுக்கப்படுகிறது. வேர்கள் செழித்து வளர உதவுகிறது. இதன் வாயிலாக, தழைச்சத்தினை பயிர்கள் ஈர்க்கும் பணிக்கு உதவி செய்கின்றனர். ரசாயன உரங்களின் அளவு பெரிதளவு குறைவதோடு மட்டுமின்றி, மண்ணின் வளம் பாதுகாக்கப்படுகிறது. இந்தா உரக்கரைசலை பயன்படுத்தும் போது, நோய் தாக்குல் குறைந்து, பயிர்களில் மகசூல் அதிகரிக்கும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.