/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே டாய்லெட் கழிவுகளை மாற்றும் 'பயோடைஜஸ்ட்' முறை; கோவை நிறுவனத்துக்கு பாராட்டு
/
ரயில்வே டாய்லெட் கழிவுகளை மாற்றும் 'பயோடைஜஸ்ட்' முறை; கோவை நிறுவனத்துக்கு பாராட்டு
ரயில்வே டாய்லெட் கழிவுகளை மாற்றும் 'பயோடைஜஸ்ட்' முறை; கோவை நிறுவனத்துக்கு பாராட்டு
ரயில்வே டாய்லெட் கழிவுகளை மாற்றும் 'பயோடைஜஸ்ட்' முறை; கோவை நிறுவனத்துக்கு பாராட்டு
ADDED : அக் 16, 2024 09:17 PM
கோவை : கோவை மண்டல அறிவியல் மையத்தில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த ஆண்டு விழா நேற்று நடந்தது. இதையொட்டி, இளைஞர்கள் விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்பட்டது. பாலிடெக்னிக், கல்லுாரி, மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மண்டல அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் லெனின் வரவேற்றார்.
மத்திய அரசின் ராணுவ அமைச்சகத்தின், (டி.ஆர்.டி.ஓ.,) பாரதியார் பல்கலை ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி கதிர்வேலு பேசியதாவது:
ஆராய்ச்சி, மேம்பாட்டிற்காக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.
தொற்று நோய் காலத்திலும், பேரிடர் மேலாண்மையிலும் ராணுவத்தில் மேற்கொள்ளப்பட்ட பல ஆராய்ச்சிகள், மனித குலத்திற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தனியார் மேற்கொண்ட பல ஆராய்ச்சிகள், ராணுவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கோவையை சேர்ந்த பல தொழில் நிறுவனங்கள், முப்படைகளுக்கும் தேவையான பாகங்களை செய்து வருகின்றன.
விண்வெளி ராக்கெட் பாகங்களை, இங்குள்ள நிறுவனங்கள் தயாரிக்கின்றன. பயோடெக் முறையில் கழிவுகளை அகற்றும் முறைகள் ராணுவத்திற்கு மட்டுமின்றி, இந்திய ரயில்வேயிலும் இப்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
ரயில்களில் வெளியேறும் கழிவுகளை, இப்போது தண்டவாளங்களில் காண முடியாது. 'பயோடைஜஸ்ட்' முறையில் இவை மாற்றப்பட்டு விடுகின்றன. கோவையை சேர்ந்த ஒரு நிறுவனம் தான் இதை தயார் செய்கிறது.
ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டில் பல்வேறு தொழில்நுட்ப பணிகள் உள்ளன. இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் இதற்கான தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்றால், விரைவாக அதிகாரிகளாகவும் பணியாற்ற முடியும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

