தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உயிரியல் கடினம், தாவரவியல் எளிது பிளஸ் 1 மாணவர்கள் தகவல்

உயிரியல் கடினம், தாவரவியல் எளிது பிளஸ் 1 மாணவர்கள் தகவல்

உயிரியல் கடினம், தாவரவியல் எளிது பிளஸ் 1 மாணவர்கள் தகவல்


ADDED : மார் 18, 2025 04:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2025 04:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்னுார் : பிளஸ் 1 தேர்வில், உயிரியல் கடினமாகவும், தாவரவியல் எளிதாகவும் இருந்தது என மாணவர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 1 தேர்வில், நேற்று அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, தாவரவியல் தேர்வும், முதல் குரூப் மாணவர்களுக்கு உயிரியல் தேர்வும் நடந்தது.

உயிரியல் தேர்வு கடினம்

ஸ்ரீயா, அய்யப்ப ரெட்டிபுதுார்.

உயிரியல் தேர்வில், தாவரவியலில் 35 மதிப்பெண்களுக்கும், விலங்கியலில் 35 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதில் ஒன்று, இரண்டு, மூன்று, ஐந்து மதிப்பெண்களில் பாதி அளவு கேள்விகள் கடினமாக இருந்தன. அதிக மதிப்பெண் பெற முடியாது.

எளிதில் தேர்ச்சி பெறலாம்

சுகப்பிரியா, அன்னுார்.

ஒரு மதிப்பெண், மூன்று மதிப்பெண் கேள்விகள் எளிது. எளிதில் தேர்ச்சி பெறலாம். ஆனால் அதிக மதிப்பெண் பெற முடியாது.

அதிக மதிப்பெண் பெறலாம்

சந்தோஷ், பச்சாகவுண்டனுார்.

தாவரவியல் தேர்வில் மொத்தம் 70 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதில் ஒரு மதிப்பெண்ணுக்கு 15 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஐந்து மதிப்பெண்களில் 5 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. பெரும்பாலான கேள்விகள் எளிதாக இருந்தன. அதிக மதிப்பெண் பெற முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us