/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பறவை, பட்டாம்பூச்சி புகைப்பட கண்காட்சி
/
பறவை, பட்டாம்பூச்சி புகைப்பட கண்காட்சி
ADDED : பிப் 01, 2024 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர் : உலக சதுப்பு நில நாள் ஆண்டுதோறும் நாளை கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி நாளை, வெள்ளலூர் குளக்கரையில், ஈரநிலம் சார்ந்த பறவை இனங்கள் மற்றும் பட்டாம்பூச்சிகள் புகைப்பட கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது.
காலை, 8:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில், இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி அமைப்பு, கோயம்புத்தூர் இயற்கை அமைப்பு, ஓசை சுற்றுச்சூழல் அமைப்பு சார்ந்தோர் மற்றும் வல்லுனர்கள் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் செய்துள்ளனர்.