/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பறவைகள் கணக்கெடுப்பு; ஆயத்த நடவடிக்கைகளில் வனத்துறை தீவிரம்
/
பறவைகள் கணக்கெடுப்பு; ஆயத்த நடவடிக்கைகளில் வனத்துறை தீவிரம்
பறவைகள் கணக்கெடுப்பு; ஆயத்த நடவடிக்கைகளில் வனத்துறை தீவிரம்
பறவைகள் கணக்கெடுப்பு; ஆயத்த நடவடிக்கைகளில் வனத்துறை தீவிரம்
ADDED : ஜன 22, 2024 12:13 AM
கோவை;கோவை வனக்கோட்டத்தில், பறவைகள் கணக்கெடுப்பு விரைவில் துவங்க உள்ளதால், வனத்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.நீர்நிலைகள், மரங்கள் அழிப்பு உள்ளிட்ட காரணங்களால், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிக பங்களிப்பு செய்யும் பறவைகள் நுண்ணுயிரினங்கள் அழிந்து வருகின்றன.
பறவைகள், அவற்றின் வாழ்வியல் மீது இன்றைய தலைமுறையினருக்கு ஈர்ப்பு ஏற்படுத்தும் வகையில், பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
கணக்கெடுப்பு வாயிலாக புதிதாக வந்துள்ள பறவைகள், அவற்றின் வாழ்விடங்கள், இனப்பெருக்கம், நீர் நிலைகளில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும். இந்தாண்டு பறவைகள் கணக்கெடுப்பு விரைவில் துவங்க உள்ளது. இதற்காக வனத்துறை சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்ட வனஅலுவலர் ஜெயராஜ் கூறுகையில்,''கோவை வனக்கோட்டத்தில், 25 நீர் நிலைகள் உள்ளன.
இவற்றுக்கு ஆண்டுதோறும் பலவிதமான பறவைகள் வருகின்றன. இந்தாண்டு பறவைகள் கணக்கெடுப்பு ஒரு வாரத்தில் துவக்க உள்ளது.
இதில், ஒரு நீர் நிலைக்கு, 4 - 5 தன்னார்வலர்கள் வீதம், 120 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர். இதற்கான ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. கணக்கெடுப்பின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.