/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காங்., முன்னாள் தலைவர் பிறந்த நாள் கொண்டாட்டம்
/
காங்., முன்னாள் தலைவர் பிறந்த நாள் கொண்டாட்டம்
ADDED : டிச 11, 2025 05:00 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
கோவை தெற்கு மாவட்ட காங். கட்சி சார்பில், காங். முன்னாள் தலைவர் எம்.பி. சோனியாவின், 79வது பிறந்த நாள் விழா, பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்தது.
மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். துணை தலைவர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். நகர தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கட்சியினர் கொண்டாடினர். தொடர்ந்து பாலக்காடு ரோடு லுார்து மாதா சர்ச்சில் சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது.
மாநில வக்கீல் பிரிவு துணை தலைவர் ரவி, மாவட்ட பொருளாளர் ஸ்ரீதர், நிர்வாகி பஞ்சலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.

