ADDED : டிச 11, 2025 05:01 AM
வால்பாறை: வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், புத்தாண்டு முதல் அன்னதான திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில், அ.தி.மு.க., ஆட்சியில், 50 பக்தர்களுக்கு அன்னதான திட்டம் துவக்கப்பட்டு, மதியம் உணவு வழங்கப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பின், அன்னதான திட்டத்தில் பயனாளிகள் எண்ணிக்கை, பாதியாக குறைக்கப்பட்டது. இதனால், பக்தர்கள் அன்னதானம் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
பக்தர்கள் கூறியதாவது: வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் அனைத்து விழாக்களும், பக்தர்கள் சார்பில் நடத்தப்படுகிறது. இந்நிலையில், கோவிலுக்கு சொந்தமான, கடைகளில் வசூலாகும் வாடகை பணம் மற்றும் கோவில் உண்டியல் பணமும், ஹிந்து சமய அறநிலையத்துறை கணக்குக்கு செல்கிறது.
ஆனால், தினமும் 50 பேருக்கு வழங்கப்பட்ட அன்னதானம், 25 பேருக்கு என குறைக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் வசதிக்காக புத்தாண்டு முதல் மீண்டும், 50 பேருக்கு அன்னதானம் வழங்கும் வகையில் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
