/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிரதமருக்கு பிறந்தநாள் இ- - போஸ்ட்டில் வாழ்த்து
/
பிரதமருக்கு பிறந்தநாள் இ- - போஸ்ட்டில் வாழ்த்து
ADDED : செப் 17, 2025 11:37 PM
கோவை; வெள்ளலுார் கிளை தபால் நிலையத்தில் இருந்து, பிரதமர் மோடிக்கு இ--போஸ்ட் வாயிலாக, வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
'இ--போஸ்ட்' என்பது, தபால் துறையால் வழங்கப்படும் மின்னணு சேவை. இதன் வாயிலாக, கடிதங்கள், ஆவணங்கள் போன்றவற்றை, ஆன்லைனில் ஸ்கேன் செய்து அனுப்ப முடியும்.
'ஏ4' காகிதத்தில் எந்த மொழியிலும் எழுதி, தங்களின் வாழ்த்துக்களை அனுப்பலாம். இதற்காக, 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நேற்று, பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, வெள்ளலுார் கிளை தபால் நிலையத்தில் இருந்து, பா.ஜ., மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சார்பில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், இ--போஸ்ட் வாயிலாக, வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
வெள்ளலுார் கிளை தபால் நிலைய போஸ்ட் மாஸ்டர் தண்டாயுதபாணி, வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டு, ஆன்லைன் வாயிலாக ஸ்கேன் செய்து, டில்லியில் உள்ள பிரதமரின் அலுவலக இணையதளத்துக்கு அனுப்பினார்.