தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/  பி.ஐ.எஸ். 79வது நிறுவன தின விழா 

  பி.ஐ.எஸ். 79வது நிறுவன தின விழா 

  பி.ஐ.எஸ். 79வது நிறுவன தின விழா 


ADDED : ஜன 24, 2026 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2026 05:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் 79-வது நிறுவன தினத்தையொட்டி, அதன் கோவை கிளை சார்பில் விழா நடந்தது.

இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் கோவை கிளை தலைவர் ராஜேஷ் துரைசாமி, ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இயக்குனர் கவிதாசன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

விழாவில் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் கோவை கிளை தலைவர் பவானி பேசுகையில், “பி.ஐ.எஸ். அமைப்பு தரநிலைகளை உருவாக்குவது மற்றும் சான்றிதழ் வழங்குவதுடன் மட்டுமன்றி, விழிப்புணர்வு ஏற்படுத்துதல், திறன் மேம்பாடு மற்றும் பங்குதாரர்களுடனான தொடர்பு ஆகிய துறைகளிலும் தனது பங்கை விரிவுபடுத்தி வருகிறது,” என்றார்.

பி.ஐ.எஸ். சான்றிதழ் பெற்ற நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், மண்டல அளவிலான முதல் உரிமம் பெற்றவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

தரநிலைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்து தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆன்லைன் வினாடி--வினா போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us