sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பி.ஐ.எஸ். 79 வது துவக்க தின விழா

/

 பி.ஐ.எஸ். 79 வது துவக்க தின விழா

 பி.ஐ.எஸ். 79 வது துவக்க தின விழா

 பி.ஐ.எஸ். 79 வது துவக்க தின விழா


ADDED : ஜன 31, 2026 05:02 AM

Google News

ADDED : ஜன 31, 2026 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர், கோவை, சுகுணாபுரத்திலுள்ள கிருஷ்ணா இன்ஜி. மற்றும்தொழில்நுட்ப கல்லூரியில், இந்திய தர நிர்ணய அமைப்பின், 79வது துவக்க தின விழா, கல்லூரி அரங்கில் நடந்தது. கல்லூரி முதல்வர் பொற்குமரன் வரவேற்றார்.

இந்திய தர நிர்ணைய அமைப்பு கோவை பிரிவின் மூத்த இயக்குனர் மற்றும் தலைவர் பவானி பேசுகையில், ஒவ்வொரு பொருட்களின் தரம் நிர்ணயிக்கப்படுவது குறித்து மாணவர்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். கட்டுமானம், இயந்திரங்கள், உற்பத்தி, தயாரிப்பு என அனைத்து துறைகளிலும் தரம் நிர்ணயிக்கப்படுகிறது.

கல்லூரி மாணவர்கள் இதனை அறிந்து கொள்ளும் விதமாக, 14 துறைகளுக்கான மாணவர் அமைப்பு துவக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு, துறை சார்ந்து விளக்கப்படும் என்றார்.

கிருஷ்ணா கல்வி குழும முதன்மை நிர்வாக அலுவலர் சுந்தரராமன் தலைமை வகித்து பேசினார். மகேந்திரா பம்புகள் நிறுவன இணை நிர்வாக இயக்குனர் ஜெயகுமார் ராம்தாஸ். தொழில்துறையில் புதுமை படைப்புகள், தரம் ஆகியவையே வளர்ச்சிக்கு முக்கியம் என குறிப்பிட்டார்.

தொடர்ந்து, தொழில்துறை, ஆராய்ச்சி,பி.ஐ.எஸ். மூலம் தரநிர்ணயத்தை உறுதி செய்தல் குறித்து கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமைப்பின் குழு கலந்துரையாடல் நடந்தது.

மேலும், 23 நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தினர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டனர். பேராசிரியர் ஸ்ரீவித்யா நன்றிகூறினார். பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us