/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துணை ஜனாதிபதி வருகையின்போது பாதுகாப்பு குறைபாடு: பா.ஜ., புகார்
/
துணை ஜனாதிபதி வருகையின்போது பாதுகாப்பு குறைபாடு: பா.ஜ., புகார்
துணை ஜனாதிபதி வருகையின்போது பாதுகாப்பு குறைபாடு: பா.ஜ., புகார்
துணை ஜனாதிபதி வருகையின்போது பாதுகாப்பு குறைபாடு: பா.ஜ., புகார்
ADDED : அக் 30, 2025 12:58 AM

கோவை: கோவைக்கு வருகை தந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது வருகைக்கு சற்று நேரத்துக்கு முன், பலத்த பாதுகாப்பையும் மீறி, ஸ்கூட்டரில் ஒரு வழிப்பாதையில் இருவர் அத்துமீறி நுழைந்ததால் பதற்றமான சூழல் உருவானது.
போலீசார் சரியான முறை யில் பாதுகாப்பு அளிக்கவில்லை என கூறி, டாடாபாத், பவர் ஹவுஸ் அருகே பா.ஜ.வினர் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 'துணை ஜனாதிபதிக்கு பாதுகாப்பில்லை; தமிழக அரசின் கவனக்குறைவு' என்பன உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன. அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, மாநில செயலாளர் நந்தக்குமார் மற்றும் கைக்குழந்தையுடன் கட்சி தொண்டர் உட்பட, 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ''துணை ஜனாதிபதி வருகையின்போது இவ்விருவர் எதற்காக அத்துமீறி நுழைந்தார்கள் என தெரியவில்லை. என்.ஐ.ஏ., இதை விசாரிக்க வேண்டும். இருவரும் போதையில் இருந்ததாகவும், ஏற்கனவே பல்வேறு வழக்குகள் அவர்கள் மீது இருப்பதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். அவர்கள் இருவரிடமும் நன்கு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

