/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகராட்சி தலைவரிடம் பா.ஜ., புகார்
/
நகராட்சி தலைவரிடம் பா.ஜ., புகார்
ADDED : மார் 21, 2025 10:53 PM

மேட்டுப்பாளையம்; காரமடை சந்தையில், சுங்கம் வரி வசூலிப்பதில் தொடர்ந்து முறைகேடு நடைபெற்று வருகிறது என காரமடை நகராட்சி பா.ஜ., கவுன்சிலர் விக்னேஷ், நகராட்சி தலைவர் உஷாவிடம் புகார் மனு அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது:- காரமடை நகராட்சியில் செயல்பட்டு வரும் தினசரி மற்றும் வார சந்தையில் சுங்கம் வரி வசூலிப்பதில் தொடர்ந்து முறைகேடு நடைபெற்று வருகிறது. சந்தை முன்பு சரியான விலைப்பட்டியல், இதுவரை வைக்கவில்லை. இதனால் இஷ்டத்துக்கு சுங்கம் வசூல் செய்யப்படுகிறது.
காரமடை நகராட்சியால் வழங்கப்பட்ட டோக்கன் வாயிலாக சரியான சுங்கம் வசூலிக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்க அமைக்கப்பட்ட ஷெட்டில் வியாபாரிகள் கடை போட்டு நடத்துகின்றனர். அதற்கு கட்டணமும் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த தவறுகள் மீது நகராட்சி நிர்வாகம் மேல் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், விவசாயிகள் மற்றும் பா.ஜ., சார்பில் வரும் 28ம் தேதி சந்தையில் பூட்டு போடும் போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.----