/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீக்கப்பட்டோர் பட்டியல் சரிபார்க்க பா.ஜ. மாநாட்டில் அறிவுரை
/
நீக்கப்பட்டோர் பட்டியல் சரிபார்க்க பா.ஜ. மாநாட்டில் அறிவுரை
நீக்கப்பட்டோர் பட்டியல் சரிபார்க்க பா.ஜ. மாநாட்டில் அறிவுரை
நீக்கப்பட்டோர் பட்டியல் சரிபார்க்க பா.ஜ. மாநாட்டில் அறிவுரை
ADDED : டிச 15, 2025 05:16 AM

அன்னூர்: 'வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டோர் குறித்து சரிபார்க்க வேண்டும்,' என பா.ஜ., அவிநாசி தொகுதி பூத் கமிட்டி மாநாட்டில் அறிவுறுத்தப்பட்டது.
பா.ஜ., அவிநாசி தொகுதி பூத் கமிட்டி மாநாடு அன்னூர் அருகே மே கிணறில் நேற்று நடந்தது. பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து பேசுகையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. இதில் நீக்கப்பட்டோர் குறித்து சரி பார்க்க வேண்டும். பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், தங்கள் பகுதி வாக்காளர்கள் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.
புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும், என்றார்.
அவிநாசி தொகுதி பொறுப்பாளர் ஜெகநாதன் பேசுகையில், தேர்தலுக்கு நான்கு மாதங்களே உள்ளன. களத்தில் வேகமாக செயல்பட வேண்டும், என்றார்.
மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார் பேசுகையில், ஆட்சேபனைக்குரிய வாக்காளர்கள் இருந்தால் படிவம் 7ன் வாயிலாக நம் கட்சி நிர்வாகிகள் புகார் தெரிவிக்கலாம், என்றார்.
மாநாட்டில், அனைத்து கிளைகளிலும் 100 உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும். உள்ளூர் கோரிக்கை மற்றும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும், என, நிர்வாகிகள் அறிவுறுத்தினர்.
சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் ஜான்சன், மாவட்ட பொதுச் செயலாளர் பிரியதர்ஷினி, ஒன்றியத் தலைவர்கள் கணேசமூர்த்தி, ஆனந்தன், அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் சாய் செந்தில் உள்பட 333 பூத் கமிட்டி நிர்வாகிகள், கிளை தலைவர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

