/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ட்ரோன் கேமரா உதவியுடன் யானைகள் கண்காணிப்பு
/
ட்ரோன் கேமரா உதவியுடன் யானைகள் கண்காணிப்பு
ADDED : டிச 15, 2025 05:15 AM

காரமடை:காரமடை அருகே ட்ரோன் கேமரா உதவியுடன், யானைகளை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் அன்னூர் காக்காபாளையம் பகுதியில் அண்மையில் தைலமரத் தோப்பில் மூன்று ஆண் காட்டு யானைகள் முகாமிட்டன. இதனை வனத்துறையினர் 5 குழுக்களாக பிரிந்து, யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழையாமல் தடுக்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே இந்த 3 யானைகள் நேற்று முன் தினம் மேட்டுப்பாளையம் அருகே குருந்தமலை பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தது. இதனை வனத்துறையினர் ட்ரோன் கேமரா உதவியுடன் கண்காணித்தனர். யானைகள் தொடர்ந்து அங்கேயே நேற்றும் முகாமிட்டன. வனத்துறையினரும் 2 வது நாளாக நேற்று ட்ரோன் கேமரா வாயிலாக யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்தனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினர் கூறுகையில், யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியே வராமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். யானைகளை பொதுமக்கள் எக்காரணத்தை கொண்டும் தொந்தரவு செய்யக்கூடாது, என்றனர்.

