/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பா.ஜ. கூட்டத்தில் அதிகளவில் பங்கேற்க முடிவு
/
பா.ஜ. கூட்டத்தில் அதிகளவில் பங்கேற்க முடிவு
ADDED : நவ 02, 2025 10:12 PM
அன்னூர்: தமிழக பா.ஜ., தலைவர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு அதிக அளவில் செல்வது என ஒன்றிய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். வருகிற 5ம் தேதி திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் பிரசார பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.
இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்த வடக்கு ஒன்றிய பா.ஜ., ஆலோசனைக் கூட்டம் அன்னூரில் நேற்று முன்தினம் நடந்தது. பா.ஜ., ஒன்றிய தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து, தொகுதி பொறுப்பாளர் ஜெகநாதன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் பேசும் அவிநாசி பிரசார பொதுக் கூட்டத்தில், அன்னூர் வடக்கு ஒன்றியத்தில் இருந்து அதிக அளவில் பங்கேற்பது. இதற்கான அழைப்பிதழ்களை வீடு தோறும் விநியோகிப்பது. சுவர் வாசகங்கள் எழுதுவது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் பிரியதர்ஷினி, வக்கீல் அணி மாவட்ட தலைவர் சிவக்குமார், உள்ளாட்சி மேம்பாட்டு அணி மாவட்ட தலைவர் தர்மலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.

