/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் கம்பங்களை மாற்றி அமைக்க பா.ஜ., கோரிக்கை
/
மின் கம்பங்களை மாற்றி அமைக்க பா.ஜ., கோரிக்கை
ADDED : டிச 12, 2024 11:30 PM
சூலுார்; திருச்சி ரோடு--கலங்கல் ரோடு சந்திக்கும் இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மின் கம்பங்களை மாற்றி அமைக்க கோரி, பா.ஜ., சார்பில் மனு அளிக்கப்பட்டது.
பா.ஜ., தொழிற் பிரிவு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், நித்தியானந்தம், சாஸ்தா குமார், விக்னேஷ் ஆகியோர் சூலுார் தாசில்தாரிடம் அளித்த மனு விபரம் :
சூலுார் திருச்சி ரோடு, கலங்கல் ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். நான்கு ரோடு சந்திக்கும் அந்த இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. வாகனங்கள் திரும்ப முடியாததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அதனால், மின் கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும்.
காங்கயம் பாளையம் ஊராட்சியில் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள நூலகம் மற்றும் ரேஷன் கடையை திறக்க வேண்டும். திருச்சி ரோட்டில் உள்ள கொங்கு மஹால் அருகே விபத்துகளை தடுக்க சிக்னல் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

