/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த வேண்டும் பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
/
கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த வேண்டும் பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த வேண்டும் பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த வேண்டும் பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
ADDED : டிச 22, 2025 05:28 AM

சூலூர்: கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பா.ஜ., கூட்டுறவு பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை பெருங்கோட்ட பா.ஜ., கூட்டுறவு பிரிவு மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சூலூர் அடுத்த ராவத்தூர் பிரிவில் நடந்தது.
மாநில அமைப்பாளர் மகா சுசீந்திரன் தலைமை வகித்து பேசியதாவது:
ஏழைகள், விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வு மேம்பட கூட்டுறவு துறை துவக்கப்பட்டது. பயிர் கடன், நகை கடன் வழங்கும் இத்துறை தமிழகத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது. ஊழல் மலிந்துள்ளது. மத்திய அரசு சார்பில், ரேஷன் கடைகளில் அந்தியோதா எனும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதில், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு, மாதந்தோறும், 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. அதிலும் முறைகேடுகள் நடக்கின்றன. ரேஷன் பொருட்கள் கொள்முதலில் முறைகேடு, கடத்தல் உள்ளிட்டவை சர்வ சாதாரணமாகி விட்டன. இவற்றை தடுப்பது நம் கடமை. ரேஷன் கடைகளில் பிரதமர் படம் வைக்க வேண்டும். மத்திய அரசால் பயன்பெறும் பயனாளிகள் பட்டியல் வைக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை நிர்வாகிகள் எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில துணைத்தலைவர் பேராசிரியர் கனகசபாபதி, அணிகள் ,மற்றும் பிரிவுகளின் மாநில அமைப்பாளர் ராகவன், மாவட்ட தலைவர் மாரிமுத்து, மாநில செயலாளர் பரமசிவன், மாவட்ட தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற் றனர்.

