/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துணை ஜனாதிபதி வருகைக்காக பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை
/
துணை ஜனாதிபதி வருகைக்காக பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை
துணை ஜனாதிபதி வருகைக்காக பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை
துணை ஜனாதிபதி வருகைக்காக பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை
ADDED : அக் 25, 2025 01:02 AM
மேட்டுப்பாளையம்: கோவைக்கு வரும் 28ம் தேதி வரவுள்ள துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வரவேற்பு அளிப்பது குறித்து, வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட பொதுச்செயலாளர் விக்னேஷ் வரவேற்புரையாற்றினார்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக மாநில பொதுச்செயலாளர்கள் முருகானந்தம் மற்றும் கருப்பு முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு, ஆலோசனை வழங்கினர்.
ஆலோசனையின் போது, தி.மு.க.,வின் மக்கள் விரோத ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும், துணை ஜனாதிபதியை வரவேற்க, விமான நிலையத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில், மாநில செயற்குழு உறுப்பினர் சதீஸ்குமார், முன்னாள் மாவட்ட தலைவர்கள், மாவட்ட, ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.