ADDED : ஏப் 07, 2025 09:57 PM

சூலுார்; பா.ஜ., ஸ்தாபன தினத்தையொட்டி, சூலுார், சாமளாபுரம் பகுதியில், கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன
ஆண்டு தோறும் ஏப்., 6ம் தேதி பா.ஜ.க.,வின் ஸ்தாபன தினமாக, கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சூலுார் வடக்கு ஒன்றியம், சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கருகம் பாளையத்தில், கொடியேற்று விழா நடந்தது. ஒன்றிய தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார்.மாவட்ட நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, கோபால்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சூலுார் கிழக்கு ஒன்றியத்தின் சார்பில், காடாம்பாடி, கலங்கல், சூலுார், காங்கயம்பாளையம் பகுதிகளில் கொடியேற்று விழா நடந்தது. மாநில துணைத்தலைவர் பேராசிரியர் கனகசபாபதி கொடியேற்றி, பா.ஜ.க., துவக்கப்பட்டதன் காரணம், கட்சியின் வளர்ச்சி, கட்சிக்காக உயிர் தியாகம் செய்த நிர்வாகிகள் குறித்தும் நினைவு கூர்ந்தார். மாவட்ட, மண்டல, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
