/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாய அணி மாநில மாநாடு கூட்டம் சேர்க்க பா.ஜ. தீவிரம்
/
விவசாய அணி மாநில மாநாடு கூட்டம் சேர்க்க பா.ஜ. தீவிரம்
விவசாய அணி மாநில மாநாடு கூட்டம் சேர்க்க பா.ஜ. தீவிரம்
விவசாய அணி மாநில மாநாடு கூட்டம் சேர்க்க பா.ஜ. தீவிரம்
ADDED : ஜன 02, 2026 05:14 AM

சூலூர்: பா.ஜ. விவசாய அணி சார்பில், 5 ம் தேதி விவசாயிகள் விழிப்புணர்வு மாநாடு ஈரோடில் நடக்கிறது.
மாநில தலைவர் நாகராஜ் தலைமையில் நடக்கும் மாநாட்டில், மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மததிய இணை அமைச்சர் முருகன், பா.ஜ. மாநில தலைவர் நாகேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
விவசாய கண்காட்சி, விவசாயம் சார்ந்த அரங்குகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் பங்கேற்று பேசுகின்றனர்.
மாநாட்டில், அதிக அளவில் கோவை மாவட்ட விவசாயிகளை பங்கேற்க வைக்க, நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். விவசாய அணி மாவட்ட தலைவர் வெள்ளிங்கிரி, மாநில செயலாளர் மணிகண்டன், மாவட்ட துணைத்தலைவர் ரவிக்குமார் உள்ளிட்டோர் சூலூர் வட்டாரத்தில் விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று மாநாட்டு அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்து வருகின்றனர். நிர்வாகிகள் கூறுகையில், 'விவசாய அணி விழிப்புணர்வு மாநாட்டுக்கு, கோவை வடக்கு மாவட்டத்தில் இருந்து அதிக விவசாயிகள் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கத்தில், விவசாயிகளை நேரடியாக சந்தித்து அழைப்பிதழ்களை கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்' என்றனர்.

